பாடசாலையில் உடற்கல்வியின் முக்கியத்துவம்

பாடசாலையில் உடற்கல்வியின் முக்கியத்துவம். மாணவர்கள் சாதிப்பதற்கு அவசியமான உடற்கல்வி பயிற்சிகளை வழங்குங்கள்.ஆர்வம் ஊட்டும் பயிற்சிகளின் ஊடாக உடல் திறன் மற்றும் குழுவுணர்வு என்பவற்றை வளரச் செய்யுங்கள்.

பாடசாலையில் உடற்கல்வியின் முக்கியத்துவம் பாடசாலையில் உடற்கல்வியின் முக்கியமானது. பாடசாலை மாணவர்களுக்கு முக்கியமான உடற்கல்வியை தள்ளி வைத்துவிட முடியாது. உடற்கல்வியின் மூலமாக மாணவர்களிடையே உடல், உள, சமூக திறன்களோடு வாழ்நாள் முழுவதுக்குமான பழக்கத்தை வளர்த்துவிட முடியும். செயற்பாடுகளற்ற வாழ்க்கை முறையும் மோசமான உணவுத் தெரியும்  காரணமாக குழந்தைகள் உடல் பருமன் நீரிழிவு மாரடைப்பு உயர்குருதி அமுக்கம் போன்ற தொற்றா நோய்கள் ஏற்படும் ஆபத்தில் உள்ளனர்.

உடற்கல்வியானது மாணவர்கள் தமது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது. தமது உடல் திணிவுச் சுட்டியை சரியாக பேண உதவுகிறது. சரியான உணவுத் தெரிவுகளை சுறுசுறுப்பான வாழ்க்கைக் கோலம் என்பவற்றை கற்பிக்கிறது. வழமையான உடற்பயிற்சி உள ஆரோக்கியத்தை மேம்படுத்தி சுயமரியாதை வளர்த்துக் கொள்ள வழி செய்கிறது. தொடர்ச்சியான உடற்கல்வி செயற்பாடுகளின் நன்மைகள்

பாடசாலை உடற்கல்வி முக்கியத்துவம் தொடர்ச்சியான உடற்கல்வி செயற்பாடுகள் வலிமை நெகிழ்வு தன்மை என்பன அதிகரிக்கின்றன. முதிர் வயதிலும் ஆரோக்கியமாக இருப்பதற்கான அடிப்படை பாடசாலை வாழ்க்கையில் ஏற்படுத்தப்படுகிறது. உடற்பயிற்சி மூலம் குருதிச் சுற்றோட்டம் அதிகரித்து ஒட்சிசன் ஊட்டச்சத்து என்பன அதிகமாக பரிமாறப்படுகிறது. 

பாடசாலையில் உடற்கல்வியின் முக்கியத்துவம்சார்ந்த நன்மைகள்

அறிவாற்றல் ஞாபகசக்தி கற்றலுக்கான ஊக்கல் செயல்திறன் என்பன அதிகரிப்பதாக ஆய்வுக்கட்டுரைகள் கூறுகின்றன. 

🌅 காலை நடைப்பயிற்சி செய்வதன் நன்மைகள் – Morning Walking Benefits in Tamil – Msatheeshsir.com

திட்டமிடப்பட்ட உடற்கல்வியின் முக்கிய கூறுகள்

பாடசாலை மாணவர்களுக்கான வாழ்க்கை அனுபவத்தை வழங்குவதற்கு பாடசாலையில் உடற்கல்வியின் முக்கியத்துவம் இன்றியமையாததாகும். உடற்கல்வி செயற்பாடுகள் திட்டமிடப்படுகின்ற போது மாணவர்களின் ஆர்வம் மற்றும் திறன்களை இனங்கண்டு பொருத்தமான விளையாட்டுக்களில் அவர்கள் ஈடுபடுவதை ஆசிரியர்கள் உறுதிப்படுத்த வேண்டும். இதன் மூலம் ஈடுபாட்டை அதிகரிக்கவும் பரந்த அளவு உடல் திறனை வளர்க்கும் முடியும்.

பாடசாலையில் உடற்கல்வியின் முக்கியத்துவத்திற்கு திட்டமிடலின் போது கவனிக்கபட வேண்டியவை

• வயதிற்கேற்ற பயிற்சி திட்டமிடப்பட்ட வேண்டும்

• சந்தர்பத்துக்கேற்ப மாற்றியமைக்கப்பட வேண்டும்

• நல்ல பழக்க வழக்கங்கள் வலியுறுத்தப்பட வேண்டும்

• ஊட்டச்சத்து 

• தனிப்பட்ட பயிற்சித் திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும்

• பொருளாதார நிலை 

• அன்றாட செயற்பாடுகள்

விளையாட்டின் போது தண்ணீர் ஏன் முக்கியம்? – Msatheeshsir.com

 உடற்கல்வியில் வெவ்வேறு வயது பிரிவுக்கான திட்டமிடலின் அவசியம்

ஆரம்ப பாடசாலை திட்டமிடல்

ஆரம்ப  பாடசாலை மாணவர்களுக்கான திட்டமிடல்கள் வேடிக்கையானதாக மகிழ்சிதரக் கூடியதாக அமைய வேண்டும். மாணவர்களின் ஈடுபாட்டை அதிகரித்து இதன் மூலம் அடிப்படை மோட்டார் திறன் வளர்க்கப்பட வேண்டும். ஓடுதல் குதித்தல் பிடித்தல் போன்ற விளையாட்டுக்கள் மாணவர்களிடத்தில் ஒருங்கிணைப்பு மற்றும் சமநிலை என்பவற்றை ஏற்படுத்தும். ஆர்வத்தை ஏற்படுத்துவதற்கு டேக் ரிலே போன்ற விளையாட்டுக்களை பயன்படுத்தலாம். 

 

பாடசாலையில் உடற்கல்வியின் முக்கியத்துவம் – உடற்கல்வியில் ஆரம்ப பாடசாலை திட்டமிடல்

இடைநிலை வகுப்பு திட்டமிடல்

கட்டமைக்கப்பட்ட உடல் செயற்பாடுகளை அறிமுகம் செய்யலாம். திறன்களை இனங்கண்டு மேம்படுத்துவதற்கான செயற்பாடுகளை ஆரம்பிக்க முடியும். கால்பந்தாட்டம், கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளில்  ஈடுபடுத்தி குழுவுணர்வு தகவல் தொடர்பாடல் திறன் என்பவற்றை அதிகரித்துக்கொள்ள முடியும். நீச்சல் கராத்தே மூலமாக சுய ஒழுக்கத்தை ஏற்படுத்தலாம். 

உயர்நிலை வகுப்பு திட்டமிடல்

உயர்நிலை வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிடப்பட்ட பயிற்சிகiளை ஆரம்பிக்க வேண்டும். மாணவர்களது குறிப்பான திறன் மேம்பாட்டுக்கான செயற்பாடுகள்; மேற்கொள்ளப்பட வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட விளையாட்டுக்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான தீவிர பயிற்சிகளை மேற்கொள்ள முடியும். உடற்பயிற்சியை மேம்படுத்த காயங்களைத் தடுக்க  பின்வரும் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். 

• வலிமை 

• இதயம் சார் தாங்குதிறன் 

• நெகிழும் தன்மை

• ஒத்திசைவு

• தாங்குதிறன்

பாடசாலையில் உடற்கல்வியின் முக்கியத்துவத்திற்கு திட்டமிடலின் போது கவனிக்க வேண்டியவை

• தனிப்பட்ட திட்டமிடல் அவசியம்

• இலக்கு நிர்ணயம்

• சமநிலை வாழ்க்கை முறையின் அவசியம்

• போசணை

• போதுமான உபகரணம்

• காலம்

• உடற்திணிவுச் சுட்டி

மாணவர்கள் சுறுசுறுப்பாக இருக்க தேவையான கருவிகள் மற்றும் அறிவை வழங்குவதன் மூலம் ஆசிரியர்கள் அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் உடல் தகுதி மீதான  ஆர்வத்தை வளர்க்க உதவ வேண்டும். 

நெகிழும் தன்மை மற்றும் இழுபட வல்ல அப்பியாசங்களை இணைத்தல் 

திட்டமிடப்பட்ட உடற்கல்வி செயற்பாடுகளில் இவை முக்கியமானதாகும் இழுபட வல்ல அபியாசங்களில் ஈடுபடுவதால் நெகிழும்  தன்மை, இயக்க நரம்புக் கலத்தின் செயற்பாடுகள் அதிகரிப்பதோடு காயங்கள் ஏற்படுவதில் இருந்து தவிர்த்திருக்க முடியும்

டைனமிக் ஸ்ட்ரெச்சிங் – dynamic stretching

இது மிக முக்கியமான ஸ்டிச்சிங் முறையாகும் உடற்பாகங்களை முழுமையாக இயக்கக்கூடிய. லெக் ஸ்விங் (leg swings) , ஆம்ஸ்செர்க்ல் (arm circles), and லாஞ்சஸ் ( lunges) என்பவற்றை  தீவிர பயிற்சிகளுக்கு முன் முன்னாயத்த செயற்பாடுகளில் (warm-up ) இல் இதனை சேர்த்துக் கொள்வதன் மூலம் நன்மை பெறலாம்

ஸ்டடிக் ஸ்ட்ரெச்சிங் (Static stretching )

நெகிழ்வு தன்மையை அதிகமாக  தரக்கூடியது ஸ்டடிக் ஸ்ட்ரெச்சிங் (Static stretching )  நீண்ட நேரத்துக்கு உடலை இயக்கத்தில் வைத்திருக்கும். தசைகள் நீளமாக சுருங்கி விரிய  உதவுகின்றது. 

இப்பயிற்சியில் தொடைத் தசை, கால் தசை, தோல் கட்டு தசை என்பன உள்ளடங்குகின்றன. இவற்றோடு பைலட் முறை மற்றும் டான்ஸ் முறை என்பவற்றை சேர்ப்பதால் மகிழ்ச்சிகரமானதாக மாற்ற முடியும்.

பாடசாலையில் உடற்கல்வியின் முக்கியத்துவத்திற்கு நவீன உடற் கல்வியில் தொழில்நுட்பத்தின் பங்கு 

பாடசாலையில் உடற்கல்வியின் முக்கியத்துவத் நவீன உடற்கல்வியோடு தொழில்நுட்பமும் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக காணப்படுகிறது. நவீன கருவிகளின் புதுமை, அளவீடு, கண்காணிப்பு முன்னேற்றம் ஆகியவற்றோடு இலக்குகளை அமைத்துக் கொள்ளவும் பயனாக அமைகிறது. விளையாட்டு துறையில் தற்போது தொழில்நுட்பமானது நிகழ்நேர முடிவுகளை தருகின்றன.

ஆப்ஸ்களை ( apps ) பயன்படுத்துவதன் ஊடாக மாணவர்கள் தான் பயன் பெற முடிகிறது.  வீடியோக்கள் மற்றும் ஆன்லைன் மூலமாக தனிப்பயனாக்கப்பட்ட திட்டங்களையும் பெற்றுக் கொள்ள முடிகிறது. இதனால் மாணவர்கள் வகுப்புக்கு உள்ளேயும் வெளியேயும் இலகுவாக உடற் கல்வியை கற்றுக் கொள்கின்றனர். 

தொலை தூரத்தில் இருந்தும் கூட உடற்கல்வி செயற்பாடுகளில் பங்கு கொள்ள முடிகிறது.அத்தோடு உடற்கல்வி செயற்பாட்டுக்கு விர்ச்சுவல் ரியாலிட்டி Virtual reality மற்றும் எக்யூப்மென்ட் ரியாலிட்டி augmented reality என்பனவும் பயன்படுகின்றன. அவற்றை மாணவர்கள் பயன்படுத்துவதால் தொழில்நுட்ப அறிவு வளர்கிறது.  

உடற்கல்வியில் மாணவர்களை பங்கேற்பதை ஊக்குவிப்பதற்கான உதவி குறிப்புகள் 

உடற்கல்வி செயற்பாடுகளில் மாணவர்கள் கலந்து கொள்ள செய்வதற்கு பின்வரும் உத்திகளை செயல்படுத்தலாம். 

  • வெற்றிகளைக் கொண்டாடுதல் 
  • நம்பிக்கை மற்றும் உந்துதலை வழங்குதல்
  • அதிகமான சந்தர்ப்பங்களை வழங்குதல் 
  • கருத்துக்களை தெரிவிக்க அனுமதித்தல்
  •  நட்பு ரீதியான போட்டிகளில் ஈடுபடுத்துதல் 
  • தொழில்நுட்பத்தை இணைத்தல் 
  • பயிற்சிகளை இசையுடன் மேற்கொள்ளுதல் 

செயற்பாடுகள் மாணவர்கள் மகிழ்ச்சியான அனுபவங்களை பெறவும் போட்டித் தன்மையுடனும் பயிற்சிகளில் ஈடுபடத் தூண்டுகிறது.

முடிவு

 உடற்கல்வி மாணவர்களின் திறனை வளர்ப்பதில் பெரும் பங்காற்றுகிறது. திட்டமிடப்பட்ட உடற்பயிற்சி உடல் தகுதி, குழு உணர்வு, ஊக்குவிப்பு என்பவற்றை மேம்படுத்துகிறது. உடற்கல்வி வாழ்நாள் முழுவதும் பின்பற்றக்கூடிய பழக்க வழக்கங்களை ஏற்படுத்த வேண்டும்.

உடல், உள, சமூக பண்புகளை விரித்தி செய்வதால் பாடசாலையிலிருந்து உடற்கல்வியை தள்ளி வைத்து விட முடியாது.  தொடர்ச்சியான வயதுக்கேற்றதுமான பயிற்சிகள் இடம்பெற வேண்டும். தொழில்நுட்பத்தை இணைப்பதன் ஊடாக மாணவர்களை உடற்கல்வி உள்வாங்க முடிவதோடு பாடசாலை வயதிலேயே தமது வாழ்க்கையை தொடங்குவதற்கான அதிகாரத்தை அளிக்க முடியும்.

 இந்த தலைப்புக்கான முழு விளக்க வீடியோ என் YouTube சேனலில் உள்ளது.

Msatheeshsir – YouTube

Leave a Reply

I’m satheesh

Welcome to my space, a friendly corner dedicated to physical education, fitness, and healthy living. With passion and commitment, I share training, guidance, and motivation to help build strong bodies, disciplined minds, and confident lives. Join me on this journey toward an active and healthy lifestyle. 💪

Discover more from Msatheeshsir.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading