அறிமுகம்
மெய்வல்லுநர் (Athletics Rules ) என்பது உலகின் மிகப் பழமையான மற்றும் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றாகும். நடை,ஓட்டம், பாய்தல், எறிதல் போன்ற பல்வேறு போட்டிகள் உள்ளடக்கிய இந்த விளையாட்டு உடல் திறன், வேகம், தாங்குதிறன் மற்றும் ஒழுக்கத்தை வளர்க்கிறது. பாடசாலை, மாகாண, தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் மெய்வல்லுநர் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
மெய்வல்லுநர் போட்டிகள் நியாயமாகவும் ஒழுங்காகவும் நடைபெறுவதற்காக சில பொதுவான விதிமுறைகள் (Athletics Rules )பின்பற்றப்படுகின்றன. இவ்விதிமுறைகள் அனைத்து வீரர்களுக்கும் சம வாய்ப்பை வழங்குகின்றன.
Athletics Rules சட்டதிட்டங்கள்
சட்டதிட்டங்கள் என்பது விளையாட்டுக்களில் செய்யக் கூடியவை செய்யக் கூடாதவையென வரையறுக்கப்பட்ட வடையங்கள் ஆகும். அவை சர்வதேச ரீதியாக அல்லது தேசிய ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களால் உருவாக்கப்பட்;டு நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அனைத்து வளையாட்டுக்களுக்கும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சட்டதிட்டங்களும் அதனை கட்டுப்படுத்துகின்ற சங்கங்களும் உண்டு. மெய்வல்லுநர் விளையாட்டுக்களுக்கான சட்டதிட்டங்களை சர்வதேச மெய்வல்லுநர் சங்கம் வடிவமைத்து நடைமுறைப்படுத்துகின்றது.
- ஆடை
- பாதணி
- போட்டி இலக்கம்
- ஓட்டப்பாதை
- ஓட்டம்
- எறிதல் நிகழ்ச்சிகள்
- பாய்தல் நிகழ்ச்சிகள்
- அஞ்சல் ஓட்டம்
- போட்டிநடை
- சட்டவேலி ஓட்டம்
Athletics Rules ஆடையணிகள்
சுத்தமானதாக காணப்பட வேண்டும்
காற்றுத் தடைக்கு உட்படாதவாறு உடலோடு ஒட்டியவாறு விளையாட்டுக்குப் பொருத்தமானதாக காணப்பட வேண்டும்.
தண்ணீரில் நனைந்தாலும் உடலின் உள்ளே உள்ள பகுதிகள் வெளித்தெறியக் கூடாது
போடடடிக்கு மத்தியஸ்தம் செய்கின்ற நடுவர்களின் பார்வையை தொந்தரவு செய்யக் கூடாது. கண்ணாடி போன்று பளிச்சிடும் ஆடைகள், கண்ணை சிமிட்டச் செய்யும் நிறங்களையுடைய ஆடைகள் மத்தியஸ்தம் வகிப்பதில் தொந்தரவாக அமையும்.
ஆடையின் முன் மற்றும் பின் பகுதிகள் ஒரே நிறத்தில் இருக்க வேண்டும் – போட்டி முடிவின் போது நடுவர்கள் சரியான வெற்றியாளரை இனங்காண்பதற்கு இலகுவாக அமையுமு.

பாதணிகள்
போட்டியொன்றில் பாதணிகளின்றி கலந்துகொள்ள முடியாது.
ஆனாலும் போட்டியின் போது பாதணிகள் பாதங்களை விட்டு விலகுமானல் வீரர் தொடர்ச்சியாக போட்டியில் பங்குபற்றி அதனை நிறைவு செய்ய முடியும்.
போட்டியாளர் போட்டியின் போது பாதணியை ஒரு பாதத்தில் அணியலாம்
பாதணி அணிவதன் நோக்கம் வீரரின் பாதுகாப்புஇ ஓட்டத்pன் போதான சமனியை பேணுதல்இ ஓட்டடத்தின் போது தரைக்கும் பாதத்திற்கும் இடையிலான உராய்வை குறைத்து பிடிப்பை ஏற்படுத்துவது ஆகும்.
ஓட்ட வீரர் ஒருவர் அதிகபற்சமாக 11 ஆணிகள் பொருத்தலாம். இவை பொருத்தமான அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
11 இடங்களில் பொருத்தப்பட வேண்டும்
போட்டி இலக்கம் Athletics Rules
போட்டி இலக்கமானது முண்டப் பகுதியிலும் முதுகுப் பகுதியிலும் கட்காயமாக அணிய வேண்டும்
நிலைக்குத்து பாய்தல் நிகழ்ச்சிகளான உயரம் பாய்தல்இ கோல் ஊண்;றிப் பாய்தல் போன்ற நிகழ்ச்சிகளில் வீரரின் நெஞ்சிப் பகுதி அல்லது முதுகுப்; பகுதியில் ( ஏதாவது ஒன்றில் ) அணிந்துகொள்ள முடியும் முன் அல்லது பின அணியலாம்
• அனைத்து போட்டிகளுக்குமான போட்டி இலக்கங்களின் நீளம் 24CM , அகலம் 20CM ஆகவும் காணப்பட வேண்டும்.
ஓட்டப்பாதை

Athletics Rules
சர்வதேச் ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு ஓட்டப்பாதையின் சுற்றளவு 400ஆ ஆகும்.
இருப்பினும் பாடசாலைகளில் காணப்படுகின்ற இடப்பற்றாக்குறை காரணமாக ஓட்டப்பாதை 200M சுற்றளவைக் கொண்டதாக அமைக்கப்படும்.
ஓரு ஒட்டப்பாதையானது இரு அரை வட்டங்களையும் இரண்டு நேர் பக்கங்களையும் கொண்டு காணப்பட வேண்டும்.
ஓட்டப்பாதையானது நீள்வட்ட வடிவ அமைப்பை கொண்டு காணப்படும்
குறைந்தது 8 சுவடுகள் காணப்படும்.
பாடசாலைகளில் தேவைக்கு ஏற்ப இந்த சுவடுகள் வரயப்படும். உதாரணமாக 3 இல்லங்கள் உள்ள பாடசாலைகளில் இல்லத்திற்கு 2 வீரர்கள் வீதம் பங்குபற்றினால் மொத்தமாக 6 சுவடுகள் போதுமானதாக காணப்படும். இங்கு 8 சுவடுகள் வரைய வேண்டிய தேவை ஏற்படாது.
சுவடு ஒன்றின் அகலம் 1.22M + or – 1CM ஆக இருக்க வேண்டும்
பாடசாலைகளில் இடவசதியைப் பொறுத்து ஒரு சுவட்டின் அகலம் 1M வரை காணப்படலாம்.
அனைத்து குறுந்தூர ஓட்டங்களிலும் தொடக்கக் கட்டை பயன்படுத்தப்படும்.
ஓட்டப் போட்டியொன்றில் பங்குகொள்ளும் வீரர் ஓட்டப்பாதையின் இடம் சுழியாக ஓட வேண்டும். போட்டியின் போது ஒரு வீரர் மற்றொறு வீரரை முந்திச்செல்கின்ற போது வலது புறமாகவே முந்திச்செல்ல வேண்டும்.
போட்டியொன்றில் பங்குபற்றும் வீரர்களிpன் எண்ணிக்கை 8 போட்டியாளர்களைவிட அதிகமாயின் தெரிவுப் போட்டி நடைபெறும். இத்தெரிவுப் போட்டிகள் தேவைக்கு ஏற்ப போட்டி நடத்துனர்களால் தீர்மானித்து நடத்தப்படும்.
முடிவுரை
மெய்வல்லுநர் போட்டிகள் வெறும் உடல் திறனை மட்டுமல்லாமல் ஒழுக்கம், நேர்மை மற்றும் விளையாட்டு உணர்வையும் வளர்க்கின்றன. எனவே, ஒவ்வொரு வீரரும் தடகளத்தின் பொதுவான விதிமுறைகள் நன்கு அறிந்து கடைபிடிக்க வேண்டும். விதிமுறைகளை மதித்து போட்டியிடும் போது மட்டுமே உண்மையான வெற்றியும் சிறந்த விளையாட்டு அனுபவமும் கிடைக்கும்.
📚 மேலும் பயனுள்ள PDF குறிப்புகள் வேண்டுமா?
உயர்தர பாடக்குறிப்புகள், கடந்தகால வினாத்தாள்கள், மாதிரி வினாத்தாள்கள் மற்றும் விடைக்குறிப்புகளை இப்போது பதிவிறக்கம் செய்யுங்கள்.
📥 PDF-ஐ இப்போது பெறுங்கள் – 072 514 7384
Join Our :-


Leave a Reply